சனி, 18 ஜனவரி, 2025

ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி.....

ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி.....?


தேவையான பொருட்கள்:
            
ஆப்பிள் - 2.
பால் - 2 கப்.
முந்திரி - 10. 
பிஸ்தா - 10. 
பாதாம் - 10. 
சர்க்கரை - 2 கப்.
            
செய்முறை:
            
             
முதலில் அடுப்பில் பாலை வைத்து சுண்டக் காய்ச்ச வேண்டும்.பின் ஆப்பிளை தேங்காய் சீவலில் வைத்து சீவிக் கொள்ள வேண்டும்.

பால் சுண்டி 1 கப் ஆனதும் அதில் சர்க்கரையைப் போட்டு கலக்கவும்.சர்க்கரை நன்கு கரைந்ததும் ஆப்பிளைப் போட்டு கலக்கவும்.

பாதாமின் தோலை உரித்துக் கொள்ளவும். பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை அரை மணி நேரம் பாலில் ஊறவைத்து மிக்சியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து வேகும் ஆப்பிளில் சேர்க்க வேண்டும்.இப்போது சுவையான ஆப்பிள் பாயாசம் தயார்.
Previous Post
Next Post

0 Comments: