சனி, 18 ஜனவரி, 2025

நருந்தாளி கீரை.

நருந்தாளி கீரை.


பலவேறு பயன்களை அளிக்கும் இந்த கீரை.

கிராமங்களில் 
புறநகர்ப்பகுதிகள், காட்டுப்பகுதிகளிலும் இந்த கீரைக்கொடி வளரும்.. நறுந்தாளி கீரை என்றும் இதற்கு மற்றொரு பெயர் உண்டு. குளிர்ச்சி: இந்த செடியின், பூக்கள், கீரைகள், என அத்தனையுமே மருத்துவ குணங்களை கொண்டிருக்கும்.. ஆனால், பெரும்பாலும், இந்த இலைகளைதான் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்மை அதிகரிக்க மிக சிறந்த கீரை இதுதான்.....

வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உணவு பழக்கம், மன நிம்மதி இல்லாமை, சரியான தூக்கம் இல்லாமை, சரியான ஊட்ட உணவு உண்ணாமை, எப்போதும் செல்போனில் வாழ்கை நடத்துவது மன அழுத்தம் வேலைப்பளு என இது போன்ற பல காரணங்களால் தாம்பத்ய வாழ்க்கை கூட பெருமளவு பாதிக்கிறது. இதன் காரணமாக தம்பதிகள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடைசியில் விவாகரத்து வரை செல்கின்றனர். சரி இப்ப விஷயத்துக்கு வரலாம்...

மேற்குறிப்பிட்ட காரணத்தினால், ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனை அதிகரித்து வருகிறது. உண்மையில் மற்ற பிரச்சனைகளை விட இந்த பிரச்சனை தான் பெரும் பிரச்சனையே அல்லவா..? இதற்கெல்லாம் தீர்வு காணும் விதமாக சித்தர்கள வகுத்துள்ள உணவு முறைகளை காணலாம் வாங்க...

"நறுந்தாளி நன்முருங்கை, தூதுவளை, பசலை,வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என விஞ்சுவார் போகத்தில்பெண்களெல்லாம் பின்வாங்கி கேள்" 

அதாவது நறுந்தாளி என்பது தாளிகீரை, நன்முருங்கை என்பது முருங்கை கீரை, தூதுவலை, பசலை கீரை, அரைகீரை இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

தாளிக்கீரை: 

வேலிகளிலும், சிறு காடுகள் ஆகியவற்றில் காணப்படும் ஒரு கொடியினம். இது உடல் சூட்டை முற்றிலும் அகற்றும். குறிப்பாக காமம் பெருக்கும் வல்லமை படைத்த கீரை இது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும், இதன் இலை மட்டுமே அப்படி ஒரு மருத்துவ குணம் கொண்டது என்றால் பாருங்களேன். உள் உறுப்புகளில் ஏற்படும் புண், அலர்ஜி, வாய்புண் சிறுநீர் பாதையில் தோன்றும் நோய்கள், விந்தணு குறைபாடு ஆகியவை ஏற்படாது. தோல் நோய்க்கு மிக சரியான கீரை இதுவே. இந்த கீரையை அரைத்து தினமும் தலை முதல் கால் வரை தேய்த்து வர உடல் அரிப்பு இருக்காது. தோல் தொடர்பான நோய்கள் வராது. எனவே கீரைகளின் இந்த அற்புத பலனை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு சாப்பிட்டு வருவது நல்லது

0 Comments: