தோல் அலர்ஜி முதல் நரம்பு தளர்ச்சி வரை விரட்டும் வேப்ப மரம் பட்டைகள்
ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ள வேப்பிலையின் மகத்துவம் ஏராளம். அதிலும் வேப்பம் கொட்டைகளின் பயன்களும் ஏராளம்.
வேப்பிலையின் இலைகள் மட்டுமல்ல, மரத்தின் பட்டைகளும் செரிமானத்துக்கு சிறந்தது.. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது... முக்கியமாக குடல்வாயுவை விலக்கக்கூடியது.. உடலிலுள்ள பித்தத்தை அகற்றவல்லது.
ஜீரணத்தை அதிகரித்து, பசியை தூண்டக்கூடியது.. ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்த மரப்பட்டைகளின் மருத்துவ குணங்கள் வியக்க வைக்கின்றன.. இந்த வேப்ப மர பட்டைகள், சருமத்துக்கு கவசம் போன்றது.. அதனால்தான் சரும நோய்களை அண்டாது தடுக்கிறது..
பட்டைகள்:
வெறும் பட்டையை சுத்தம் செய்து, தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி ஆறவைத்து குளித்து வந்தாலே, சருமம் பாதுகாக்கப்படும். அலர்ஜிகள் இருந்தாலும் நீங்கிவிடும்.. அரிப்பு பிரச்சனையும் விலகிவிடும். வேப்பமர பட்டையுடன் கொஞ்சம் கற்பூரத்தையும் அரைத்து, பருக்கள், புண்களின் மீது தடவினால் உடனே தீர்வு கிடைக்கும்.
அதேபோல, அரிப்பு, தேமல் தொந்தரவு வந்தவர்கள், இந்த பசையை தடவினால் நிவாரணம் கிடைக்கும். இந்த மரப்பட்டையுடன் மஞ்ச பொடியும் சேர்த்து சருமத்துக்கு உபயோகிக்கலாம்.
வேப்பமரப் பட்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு, கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படுகிறதாம்.. இந்த மரத்தின் சாற்றினை, விலங்குகளுக்கும் தந்து சமீபத்தில் விஞ்ஞானிகள் பரிசோதித்திருக்கிறார்கள்.. அப்போதுதான், இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் மட்டுமல்லாமல், அதன் புதிய உருமாற்றங்களுக்கு எதிராகவும் செயல்படும் திறன் கொண்டுள்ளதாம் இந்த மரப்பட்டை...
அதைவிட முக்கியமாக மனித செல்களுக்குள் வைரஸ் நுழைவதை தடுக்கும் பேராற்றல் கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
நரம்பு தளர்ச்சி:
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு அருமருந்து இந்த வேப்பம்பட்டைகள்.. 100 வயதான வேப்பமர பட்டையை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்து கொண்டு, அதை சூரணமாக தயாரித்து கொள்ள வேண்டும். இதனை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலே நரம்புத்தளர்ச்சி குணமாகிவிடுமாம்.
உடலில் உஷ்ணம் இருந்தால், இந்த வேப்ப மரப்பட்டையே சிறந்த தீர்வாகும்.. காய்ச்சல் இருந்தாலும், மரப்பட்டையே தீர்த்துவிடும்.. சிறிது தண்ணீரில் இந்த பட்டையை போட்டு, பாதி தண்ணீராக சுண்ட வைத்து குடித்தாலே, காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும்.. அல்லது வேப்பமர பட்டையுடன் 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடி செய்து, பசும்பாலில் கலந்து குடித்தாலும் காய்ச்சல் குணமாகிவிடும்.
வேப்ப மரப்பட்டையில் கிருமி நாசினிகள் உள்ளதால், தொற்றுநோய்களிலிருந்து நம்மை காக்கிறது.. அதனால்தான் காயங்களையும் விரைந்து ஆற்றுகிறது.. ஆனால், மருந்தாக உட்கொள்வதற்கு முன்பு, டாக்டர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவதே சிறந்த ஆரோக்கியமாகும்.. அதுவே பாதுகாப்பும் ஆகும்.
0 Comments: