சனி, 18 ஜனவரி, 2025

கீரை சூப் செய்வது எப்படி....?

கீரை சூப் செய்வது எப்படி....?


தேவையான பொருள்கள்:

ஆய்ந்து சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - சிறிது
எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளாவும்.

பாதியளவு முருங்கைக்கீரையை மிக்ஸியில் இட்டு நைசாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

தக்காளி சேர்த்து குழைவாக வரும் வரை வதக்கவும். பின் மீதியுள்ள முருங்கைக்கீரை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

2 தம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.

விருப்பப்பட்டால் மிளகுத்தூள், வெண்ணெய் சேர்க்கலாம். ஆரோக்கியமான சூப் ரெடி.
Previous Post
Next Post

0 Comments: