சிக்கன் ப்ரைட் ரைஸ்.
தேவையான பொருள்கள்:
சாதம் தயாரிக்க:
பாசுமதி அரிசி - ஒன்றரை டம்ளர்
சோயா சாஸ் - ஒரு டிராப்
வெங்காயம் - கால் பாகம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி
மேகி கியுப் - கால்
பட்டர் - இரண்டு தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெயும் பட்டரும் - இரண்டு தேக்கரண்டி
சர்க்கரை - கால் தேக்கரண்டி
பூண்டு - மூன்று பல் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - ஒன்று (நடுவில் கீறி விதை எடுத்து பொடியாக அரிந்தது)
வதக்கி கொள்ள:
எலுபில்லாத சிக்கன் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
கேபேஜ் - கால் கப்
கேரட் - கால் கப்
வெங்காய தாள் - கால் கப்
பீன்ஸ் - இரண்டு மேசைக்கரண்டி
கேப்ஸிகம் - ஒரு மேசைக்கரண்டி
கார்ன் - ஒரு மேசைக்கரண்டி
பச்ச பட்டாணி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் அரிசியை அரை மணி நேரம் முன்பே ஊற வைக்கவும்.
அதற்குள் மற்றதை ரெடி பண்ணவும்.
சிக்கனை கழுவி பொடியாக நறுக்கி பட்டர், பெப்பர், சால்ட் போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அனைத்து காய்களையும் போட்டு வேக வைக்க வேண்டாம் அரை வேக்காடாக வதக்கினால் போதும்.
சிக்கனையும் சேர்த்து விடுங்கள்.
இப்போது ரைஸ் குக்கர் அல்லது குக்கரில் நல்லெண்ணெய் பட்டர் கலவையை ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு, மேகி கியூப் போட்டு லேசாக வதக்கி சிவக்க வேண்டாம். சோயாசாஸ் சேர்த்து அரிசியும் போட்டு வதக்கி ஒன்றரை டம்ளருக்கு ஒன்றரை டம்ளறே ஊற்ற வேண்டும்.
குக்கரில் இரண்டாவது விசில் வரும் போது ஆஃப் பண்ணி விட்டு ஆவி அடங்கியதும் உடனே உதிர்த்து எடுத்து விட வேன்டும்.
எலக்ட்ரிக் குக்கர் என்றால் கீப்பில் வைத்து கொஞ்ச நேரத்தில் இறக்கி உதிர்த்து கொள்ளுங்கள்.
இப்போது முதல் கலக்கிய கலவையில் வெந்த சாதத்தை கலந்து மீண்டும் ஒரு முறை இரண்டு நிமிடத்திற்கு அடுப்பில் வைத்து நன்கு கிளறி இறக்கவும். கடைசியில் லெமென் ஜூஸ் அரை முடி, பெப்பர் அரை தேக்கரண்டி, உப்பு தேவைக்கு சேர்த்து கிளறி கொள்ளவும்.
இதில் முட்டை சேர்க்கவில்லை தேவைப்படுபவர்கள் மூன்று முட்டை, பெப்பர், சால்ட் போட்டு கலக்கி சுட்டு எடுத்து நல்ல கொத்தி அதில் சேர்த்து கலக்கவும்.
சுவையான ப்ரைட் ரைஸ் ரெடி. இதற்கு தொட்டு கொள்ள காலிப்ளவர் 65 (அ) பெப்பர் சிக்கன்.
ஃப்ரைட் ரைஸ் -1
தேவையான பொருள்கள்:
சாதம் - 3 கப்
கேரட் - ஒன்று
பீன்ஸ் - 7
பெரிய வெங்காயம் - ஒன்று
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - அரை அங்குல துண்டு
பூண்டு - 10
சோம்பு - முக்கால் தேக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி + கால் தேக்கரண்டி
செய்முறை:
கேரட் மற்றும் பீன்ஸை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருள்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் வைத்து நன்கு சூடுப்படுத்தவும். அதில் பொடியாக நறுக்கின கேரட், பீன்ஸை போட்டு 10 நிமிடம் வேக வைத்து அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த கேரட், பீன்ஸை போட்டு 3 கிளறி விட்டு பிறகு உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும்.
அதில் வேக வைத்த சாதத்தை போட்டு நன்றாக கிளறி விடவும். மேலே 2 தேக்கரண்டி நெய் ஊற்றி ஒன்றாக கிளறி விடவும்.
அதன் மேலே கொத்தமல்லித் தழையை தூவி இறக்கி பரிமாறவும்.
எளிதில் சுவையாக செய்யக்கூடிய ஈஸி ப்ரைட் ரைஸ் தயார். திருமதி. சுமதி இளங்கோவன் அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த குறிப்பை வழங்கியுள்ளார்.
பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ்.
தேவையான பொருள்கள்:
பாசுமதி அரிசி - 2 ஆழாக்கு (400 கிராம்)
பேபி கார்ன் - கால் கிலோ
காரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
பட்டாணி - 50 கிராம்
கொத்தமல்லித் தழை - 100 கிராம்
புதினா - 100 கிராம்
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்து வடிகட்டி பாலெடுத்து அரிசியுடன் சேர்த்து உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பேபி கார்ன், காரட், பீன்ஸ், பட்டாணி (பச்சை பட்டாணி) ஆகியவற்றை போட்டு சிறு தீயில் வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி கொத்தமல்லித் தழை மற்றும் புதினாவை போட்டு நன்கு வதக்கவும்
கடைசியாக உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும்.
நெய்யை மேலே ஊற்றி ஒரு முறை கிளறி இறக்கவும். சுவையான பேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ் ரெடி.
ஃப்ரைடு ரைஸ் -2
தேவையான பொருள்கள்:
வடித்த சாதம் - 3 கப்
வெங்காயம் - 3
தக்காளி - ஒன்று
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 20 பற்கள்
உப்பு - அரை மேசைக்கரண்டி
கேரட் - 3
எண்ணெய் - அரை கப்
செய்முறை:
பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவி வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
தோலுரித்த பூண்டுடன் மிளகு சேர்த்து அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள பூண்டு, மிளகுத் தூள் போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கேரட் துருவல் போட்டு 4 நிமிடங்கள் வதக்கவும்.
நன்கு வதங்கியதும், உப்பு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த சாதத்தைப் போட்டு மசாலாவுடன் சாதம் ஒன்றாகச் சேரும்படி நன்கு கிளறவும். (பாஸ்மதி அரிசி சாதமாக இருந்தால் மிகவும் பொலபொலவென்று இருக்கும்).
பிறகு தோசைக்கரண்டியால் சாதத்தை நன்கு அழுத்தி சமப்படுத்தி, 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
எளிதாகச் செய்யக் கூடிய ஃப்ரைடு ரைஸ் தயார். இதை குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
0 Comments: