தினை பாயாசம்:
தேவையான பொருட்கள்
தினை மாவு - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
முந்திரி,திராட்சை - தேவையான அளவு
பால் - 500 மில்லி கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
ஏலக்காய், சுக்கு - சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பாலை நன்கு காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தினை மாவுடன் தண்ணீர் கலந்துக்கொள்ளவும்.
பின்னர் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளறவும். சிறிது நேரத்திற்குப் பிறகு இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.
இதையடுத்து நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சை, பொடி செய்த ஏலக்காய் மற்றும் காய்ச்சி வைத்த பால் அகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்தால் போதும் சுவையான தினை பாயாசம் ரெடி.
0 Comments: