தேவையான பொருள்கள்:
போன்லெஸ் சிக்கன் - 300 கிராம்
சின்ன வெங்காயம் - கால் கிலோ
மிளகாய் வற்றல் - 6
மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி அலசி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும்.சிறிது உப்பு,மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும்.வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காயவும் கிள்ளிய மிளகாய் வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் ரெடி செய்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.நன்கு வேக விடவும்,தண்ணீர் தேவையென்றால் சிறிது தெளித்து மூடி போட்டு வேக விடவும்.
நன்றாக சிக்கன் சுண்டி வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான சிக்கன் சிந்தாமணி ரெடி.
இது சாம்பார்,தயிர் சாதம்,மற்றும் கட்டுசோறுக்கு சூப்பராக இருக்கும்.
இது கொங்கு நாட்டு ஸ்பெஷலாகும்.
0 Comments: