* சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.
* சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும்.
* 'சிவாயநம' என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை.
* 'மஹா' என்றால் பாவத்தில் இருந்து விடுபடுவது என்றும் பொருள் படும். சிவராத்திரி விரதம் நிச்சயம் பெரிய பாவங்களைப்போக்கும்.
* ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.
* எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.
• ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.
* கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
* கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
* கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் ஆகிய நறுமணப்பொருட்களை கலந்து தயாரிக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் தான் சிவபெருமானுக்கு மிகவும் பொருத்தமான வழிபாடாக கருதப்படுகிறது.
* சனிபிரதோஷ தினத்தன்று வரும் சிவராத்திரிக்கு 'கவுரிசங்கரமண மஹாசிவராத்திரி' என்று பெயர். அந்த சிவராத்திரியில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
* சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் 3 கண்களாக உள்ளனர். சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
* சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ…. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.
* சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மை தரும். சிவராத்திரி இரவில் திருமுறை ஓதுவது மிக சிறப்பானது.
* சிவராத்திரி தினத்தன்று
1. ஸ்ரீ பவாய நம,
2. ஸ்ரீ சர்வாய நம,
3. ஸ்ரீ பசுபதயே நம,
4. ஸ்ரீ ருத்ராய நம,
5. ஸ்ரீ உக்ராய நம,
6. ஸ்ரீ மஹாதேவாய நம,
7. ஸ்ரீ பீமாய நம,
8. ஸ்ரீ ஈசாராய நம
என்ற 8 பெயர்களை சிவராத்திரியன்று ஜெபிப்பது நல்லது.
தெரிந்து கொள்வோம்......
உலகின் முதல்வனே அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையாரே உன் மலர் பாதம் சரணம் . 🌿🌿
**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என் வரமே
0 Comments: