புதன், 26 பிப்ரவரி, 2025

மகாசிவராத்திரி மகத்துவங்கள்

மகாசிவராத்திரி மகத்துவங்கள் :


💫சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

💫சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

💫மகாசிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்குரிய பொருட்களை வாங்கி ஆலயத்திற்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

💫சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவபூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

💫ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனையும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனையும் தரவல்லது.

💫சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மையை தரும்.

சிவனுக்கு உகந்த வில்வத்தின் சிறப்பு :

🌟சிவபெருமானுக்கு வில்வம் ஒன்று சாற்றினால் சிவலோக பதவியும், இரண்டு சாற்றினால் சிவன் அருகில் இருக்கும் பாக்கியம் கிட்டும். மூன்று சாற்றினால் அவனின் அருள் பெறலாம், நான்கு வில்வ இதழ்கள் சாற்றினால் அவனுடன் ஐக்கியமாகலாம் என்பது ஐதீகம்.

🌟பாவங்களை போக்கி புண்ணியங்களை தருவது வில்வம் ஆகும். அஞ்ஞானத்தை வளர்ப்பது வில்வம் ஆகும். வில்வ தழையினால் அர்ச்சனை செய்யும் போது சிவபெருமான் மனம் மகிழ்ந்து சுகம், ஐஸ்வர்யம், புலன்ஒழுக்கம், சந்தானம், வேத, ஆகம, சாஸ்திரஞானம் இவற்றை எல்லாம் அருள்கின்றார்.

🌟வில்வ தழையினால் அர்ச்சனை செய்பவருக்கு கிட்டாத பலன் எதுவுமே கிடையாது. சதுர்த்தி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, திங்கட்கிழமை, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வில்வ இலைகளை பறிக்கக்கூடாது. பிற நாட்களில் தூய்மையாக பறித்து ஓலைக் கூடையில் வைக்க வேண்டும்.

🌟வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இலைகளையே பூஜைக்கு பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ இலைகளும் உள்ளன.

🌟பூஜைக்குப் பயன்படுத்துகின்ற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக்கொள்வது உத்தமம்.

🌟தினமும் சிவனாருக்கு வில்வம் சாற்றி வழிபடுவது சிறப்பு. மகாசிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சாற்றி சிவனாரை தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

Previous Post
Next Post

0 Comments: