புதன், 26 பிப்ரவரி, 2025

உஙகள் குலதெய்வம் எது? இன்று வழிபட மறக்காதீர்

மகா சிவராத்திரி; 

உஙகள் குலதெய்வம் எது? 
இன்று வழிபட மறக்காதீர்


குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றிமையாதது.

 இஷ்டதெய்வம் என்பது நாம் விரும்பி வழிபடும் கடவுள். 

எனினும், குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது.

 ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குகிறோம்.

 குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருள்சக்தியாகக் கருதப்படுகிறது.

 சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும். இதனால் அவர்களுக்கு பல சோதனைகள் ஏற்படுவதாகச் சொல்வதுண்டு. 

இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவில் கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., தூத்திலுள்ள கதிராமங்கலத்தில் உள்ளது. 

கதிர் வேய்ந்த மங்கலம் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார்.

 கதிரவனின் கதிர்கள் அம்பிகையின் மீது படுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இவளுக்கு ஆகாச துர்க்கை என்றும் பெயருண்டு. 

ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் வன துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பு.

காஞ்சி மகா சுவாமிகளை தரிசிக்க வந்த பக்தர் கண்ணீருடன் “சுவாமி... எத்தனையோ கோயில்களுக்குப் போயும் என் கஷ்டம் தீர்ந்தபாடில்லை” என்றார். 

அருள் பொங்கும் கண்களால் பார்த்தபடி சுவாமிகள் “உன் குலதெய்வத்தை வழிபட்டாயா?” 
எனக் கேட்டார். “குலதெய்வமா... எதுவென்றே தெரியாதே” என்றார்.  

  “வயதான உறவினர்களை சந்தித்துப் பேசு. அவர்களுக்கு குலதெய்வம் எதுவென்று தெரிந்திருக்கும். 

அங்கு போனால் கஷ்டம் ’சூரியனைக் கண்ட பனி’யாக மறையும்” என்றார் சுவாமிகள். இதிலிருந்து குலதெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது தெரிகிறது.

 வீட்டில் விளக்கேற்றி இன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
Previous Post
Next Post

0 Comments: